6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ ஏ75 & ஏ75எஸ் அறிமுகம்.!
இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆக்டோ-கோர் மீடியாடெக் 2.5ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6763 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஓப்போ நிறுவனம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4ஜிபி ரேம் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. தைவான் நிறுவனத்தின் ஆன்லைன் இ-ஸ்டோரில் மூலம் ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்ம ஸ்மார்ட்போன் மாடல்கள்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 :
ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன்களில் 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்
(2160 × 1080) என்ற பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங்
கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன்கள்.

மீடியாடெக்:
இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆக்டோ-கோர் மீடியாடெக் 2.5ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6763 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

நினைவகம்:
ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன்களில் 4ஜிபி ரேம் வசதி இடம்பெற்றுள்ளது, ஆனால் ஓப்போ ஏ75 ஸ்மார்ட்போனில் 32ஜிபி மெமரி மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போனில் 64ஜிபி மெமரியும் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இரண்டு ஸ்மார்ட்போனிகளில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது ஓப்போ ஏ75 மற்றும் ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போன்கள்.

3200எம்ஏஎச்:
இரண்டு ஸ்மார்ட்போனிகளில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
ஓப்போ ஏ75 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.23,515-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஓப்போ ஏ75எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,653-ஆக
உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications