ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ74.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ74 சிப்செட்
ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 66 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. எனவே இது கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு மிகவும் அருமையாக பயன்படும் என்றே கூறலாம். குறிப்பாகஇதன்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ஏ74 மெமரி
அதேபோல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி வெளிவரும் ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன். மேலும்
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஓப்போ ஏ73
ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 2400 x 1080 பிக்சல்கள் திரை, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தோடு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் கொண்டுள்ளது ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 30 வாட்ஸ் விஓஓசி 4.0 வேகமான சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனானது 662 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது.

ஓப்போ ஏ73 கேமரா
ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல்கள் மோனோக்ரோமேடிக் சென்சார்கள் உள்ளது. செல்பி கேமராவிற்கென 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி பாதுகாப்பு அம்சத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இணைப்பு அம்ச ஆதரவோடு கலர் ஓஎஸ் 7.2 மூலம் இயக்கப்படுகிறது. வைபை 802.11, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியை இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நேவி ப்ளூ மற்றும் க்ளாசிக் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662, பின்புறத்தில் 16 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா, 2 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது. இதன் செல்பி வசதிக்கென 16 எம்பி செல்பி கேமரா, 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. இதில் 128 ஜிபி சேமிப்பு வசதியும் இதில் உள்ளது. 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications