இதோ இந்த மாதத்துக்குள்., அதுவும் உறுதியாக: அட்டகாச அம்சம் மற்றும் விலையில் ஒப்போ ஏ74 5ஜி!

|

தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் ஒப்போ ஏ74 5ஜி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் ஒப்போ ஏ74 5ஜி விவரக்குறிப்புகள் சற்று மாறுபட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ ஏ75 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ ஏ74 மற்றும் ஒப்போ ஏ74 5ஜி

ஒப்போ ஏ74 மற்றும் ஒப்போ ஏ74 5ஜி

ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ74 மற்றும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்த மாத தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் அறிவித்தது. தற்போது வெளியான கசிவுத் தகவலின்படி ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கிறது.

ரூ.20,000 என்ற விலையின் கீழ்

ரூ.20,000 என்ற விலையின் கீழ்

அதேபோல் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தகவலின்படி, ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஆஃப்லைன் சந்தைகளில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. ஒப்போ ஏ74 5ஜி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ரூ.20,000 என்ற விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என டுவிட் தகவல் தெரிவிக்கிறது.

டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள விவரக்குறிப்புகள்

டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள விவரக்குறிப்புகள்

டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், ஒப்போ ஏ74 5ஜி தென்கிழக்கு சந்தையில் அறிவிக்கப்பட்டது இருப்பினும் இந்தியாவில் இது சற்று மாறியிருக்கும் என தெரிகிறது. அதேபோல் டிப்ஸ்டர் தகவலின்படி ஒப்போ ஏ74 5ஜி விவரக்குறிப்புகளானது இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ93 5ஜி சாதனத்துக்கு ஒத்ததாக இருக்கிறது.

ஒப்போ ஏ74 5ஜி எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

ஒப்போ ஏ74 5ஜி எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

ஒப்போ ஏ74 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம், 128 ஜிபி 256 ஜிபி ஆகிய இரண்டு உள்சேமிப்பு வசதிகளிலும் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர் வலைதளத்தில் இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் தெரியவந்துள்ளது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1080x2400 பிக்சல்கள் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளரின் இணையதளத்தில் விலை, சிறப்பம்சங்கள் குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது. இதன் 4ஜி வேரியண்ட் மாடலின் விவரக்குறிப்புகள் முன்னதாகவே கசிந்தது.

ஒப்போ ஏ74 5ஜி இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ ஏ74 5ஜி இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ ஏ74 5ஜி வை-பை, ப்ளூடூத் வி5.1, அதேபோல் சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு விருப்பங்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறுகிறது. சில்லறை விற்பனையாளரின் வலைதளமான ஒப்போ ஏ74 5ஜி புகைப்படம் மூன்று பக்கங்களிலும் மெலிதான உளிச்சாயுமோரம் காட்டப்படுகின்றன. அதேபோல் பக்கவாட்டில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் இருக்கும் என காட்டப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A74 5G Smartphone May Launching by the End of April: Expected Price, Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X