5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. வரும் ஏப்ரல் 26-ம் தேதி அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடல். இப்போ ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5000 எம்ஏஎஎச் பேட்டரி
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் ஆதரவு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. குறிப்பாக ஃபென்டாஸ்டிக் பர்பில் மற்றும் 'ஃப்ளூயிட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஒப்போ ஏ74 5ஜி சாதனம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications