Oppo A72 5G மீடியாடெக் செயலியுடன் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!

|

Oppo A72 5G ஸ்மார்ட்போனானது 5 ஜி ஆதரவோடு மீடியாடெக் செயலியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

5ஜி ஆதரவோடு ஓப்போ ஏ 72 ஸ்மார்ட்போன்

5ஜி ஆதரவோடு ஓப்போ ஏ 72 ஸ்மார்ட்போன்

5ஜி ஆதரவோடு ஓப்போ ஏ 72 ஸ்மார்ட்போன் இறுதியாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாத இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்போ ஏ 72 5ஜி விலை சுமார் ரூ.20,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது.

ஓப்போவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்

ஓப்போவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்

இந்த ஸ்மார்ட்போனானது ஓப்போவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சீனாவில் உள்ள மற்ற சில்லரை விற்பனை தளங்களில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ஓப்போ ஏ72 4 ஜி ஸ்மார்ட்போனின் வாரிசாக இது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நிறங்களில் விற்பனை

மூன்று நிறங்களில் விற்பனை

இந்த ஸ்மார்ட்போனானது சிம்பிள் பிளாக், நியான் மற்றும் ஆக்சிஜன் வயலட் உள்ளிட்ட மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் டிஸ்ப்ளே, டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 4040 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!

சர்வதேச சந்தை விவரங்கள் தெரியவில்லை

சர்வதேச சந்தை விவரங்கள் தெரியவில்லை

இந்த ஸ்மார்ட்போனானது சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலை விவரங்கள் குறித்து தெரிவிக்கவில்லை. 4ஜி மாடலோடு ஒப்பிடும்போது 5ஜி ஸ்மார்ட்போனில் சில சிறப்பம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஓப்போ ஏ72 5ஜி: அம்சங்கள்

ஓப்போ ஏ72 5ஜி: அம்சங்கள்

ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே முழு ஹெச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் (1,080 × 2,400 பிக்சல்கள்) மற்றும் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரை வருகிறது. ஆண்ட்ராய்டு ஆதரவோடு மீடியாடெக் பரிமாணம் 720 எஸ்ஓசி இரண்டு கோர் கார்டெக்ஸ் ஏ 77 கோர்களில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஆறு கோர்டெக்ஸ் -ஏ 55 கோர்களில் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் கடிகாரத்தோடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பின்புறத்தில் மூன்று கேமரா

பின்புறத்தில் மூன்று கேமரா

ஓப்போ ஏ 72 5ஜி பின்புறத்தில் மூன்று கேமரா அம்சங்களோடு, 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்சல் ஆழம் சென்சார் கேமரா சென்சார்கள் இதில் உள்ளது. மேலும் இதில் 4 கே வீடியோ பதிவு ஆதரவையும் வழங்குகிறது. முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் 8 மெகாபிக்சல் கேமரா ஆதரவு உள்ளது.

4040 எம்ஏஹெச் பேட்டரி

4040 எம்ஏஹெச் பேட்டரி

ஓப்போ ஏ 72 5ஜி 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு 4040 எம்ஏஹெச் பேட்டரி அம்சம் இதில் உள்ளது. அதோடு ஸ்மார்ட்போனில் வைபை ஏசி, ப்ளூடூத் 5.0 எல்இ, ஜிபிஎஸ் 5ஜி, டிராக் 2.0 குரல் மேம்பாடுகள் மற்றும் 3.5 மீமீ ஆடியோஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo A72 5G launch with MediaTek Processor price and specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X