விரைவில் : 13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ஓப்போ ஏ71எஸ்.!
இந்த ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் ஓப்போ நிறுவனம் ஓப்போ ஏ71 என்ற ஸ்மார்ட்போனை பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் ஓப்போ ஏ71எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஓப்போ ஏ71எஸ் :
ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஎப்டி எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1,920×720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
ஓப்போ ஏ71எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9.990-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications