ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் ஓப்போ ஏ71(2018) அறிமுகம்.!
ஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
ஓப்போ நிறுவனம் தற்சமயம் புதிய ஓப்போ ஏ71(2018) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பாக்கிஸ்தான் மொபைல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெறவில்லை. அதன்பின்பு பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஓப்போ ஏ71(2018) :
ஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு :
ஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் AI Beauty Recognition Technology கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி ரியர் கேமரா:
ஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சேமிப்பு:
ஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ளது.


விலை:
ஓப்போ ஏ71(2018) ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.11,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications