அசத்தலான ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
இந்த சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி, 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ நிறுவனம் நேற்று சீனாவில் ஒப்போ ஏ7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் விரைவில்
இந்தியாவில் அநிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் ஐபோனில் இருக்கும் நாட்ஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு பசுமை, தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா:
ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடகம். குறிப்பாக எச்டிஆர் மோட் மற்றும்n செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இந்த சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி,
4ஜி வோல்ட்இ, டூயல்-சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் நவம்பர் 22-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. பின்பு ரூ.16,500 விலை மதிப்பு கொண்டுள்ளது ஒப்போ ஏ7 மாடல்.


Click it and Unblock the Notifications