Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ7 (Oppo A7) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது TENAA சான்றிதழ் தளத்தில் PYE110 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ7 அம்சங்கள் (Oppo A7 Specifications): 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வருகிறது புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ColorOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேவும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன். அதேபோல் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

வருகிறது புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A7 specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X