OPPO போட்டான் பாரு.. 8000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் புது மாடலாக ஓப்போ ஏ7 ப்ரோ (OPPO A7 Pro) வெளியாகி இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா மற்றும் IP69K ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்த ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் வெளியாகியது. இதைத் தொடர்ந்து, ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் இப்போது 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம் என்பதால், இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஓப்போ ஏ7 ப்ரோ அம்சங்கள் (OPPO A7 Pro Specifications): 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 MAX) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 4,300எம்எம்² விசி கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.
45W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜ் (SuperVOOC Flash Charge) சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. இந்த கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus), 10x டிஜிட்டல் ஜூம் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், நைட் சீன்ஸ் (Night Scenes), மல்டி-வியூ ரெக்கார்டிங் (Multi-View Recording) கிடைக்கிறது.
மேலும், டைம்-லேப்ஸ் போட்டோகிராபி (Time-lapse Photography), அண்டர்வாட்டர் கேமரா (Underwater Camera) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் பிராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. IP69K ரேட்டிங், IP68 ரேட்டிங், IP66 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது.
மேலும், ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,065 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,303ஆகவும் இருக்கிறது. இந்த விலைகளுடன் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
