அடுத்த வாரம் களமிறங்கும் புதிய ஒப்போ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ7 ப்ரோ (Oppo A7 Pro) ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானதும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ஒப்போ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ஏ7 ப்ரோ அம்சங்கள் (Oppo A7 Pro specifications): 6.57-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் புதிய ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் (Qualcomm Snapdragon 4 Gen 5 chipset) உடன் இந்த ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையன்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ7 ப்ரோ வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாகும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உடன் ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications