ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ரஜ்யமே எதிர்பார்த்து கொண்டிருந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் (OPPO A7 Pro Max) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. பேட்டரி, டிசைன், கலர் விவரங்கள் உறுதியாகிவிட்டது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. அதேபோல ரேம் மற்றும் மெமரி விவரங்களும் தெரியவந்துள்ளன.
இதுவரையில் வெளியான ஓப்போ ஸ்மார்ட்போன்களிலேயே பெரிய பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் வெளியாக இருக்கிறது. இதனாலேயே எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற மற்ற பீச்சர்களிலும் குறை சொல்ல முடியாதபடி இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது.

இதனால், குளோபல் மற்றும் இந்திய வெளியீட்டின் மீதும் கவனம் சென்றுள்ளது. சீன மார்கெட்டில் வெளியாகிய பிறகே மற்ற மார்கெட்களில் கிடைக்கும். ஆகவே, சீன வெளியீட்டு தேதிக்கு ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் காத்து கொண்டிருந்தனர். இவர்களுக்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதியை வெளியீட்டு தேதியாக ஓப்போ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
10000mAh பேட்டரியை மட்டுமல்லாமல், ரேம், மெமரி மற்றும் கலர் வேரியண்ட்களுடன் ப்ரீ-ஆர்டருக்கு லிஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
இந்த வேரியண்ட்களுடன் பிளாக் (Black), ஆரஞ்ச் (Orange) மற்றும் கிராடியன்ட் ஒயிட் (Gradient White) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. டூயல் செல் பேட்டரி செட்டப் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓப்போ நிறுவனமானது, சிலிகான்-கார்பன் அனோட் சிங்கிள்-செல் பேட்டரி (Silicon-carbon Anode Single-cell Battery) செட்டப்பை கொடுக்க இருக்கிறது.
இவ்வளவு பெரிய பேட்டரி கிடைப்பதால், பைபாஸ் சார்ஜிங் எதிர்பார்க்கலாம். ஓவர் சார்ஜிங், நைட் சார்ஜிங் உள்ளிட்டவற்றில் புரொடெக்சன் பீச்சர்களை எதிர்பார்க்கலாம். அதேபோல விசி கூலிங் சிஸ்டம் கட்டாயம் கிடைக்கும். 7 வருடங்களுக்கு பர்ஃபாமென்ஸ் வாரண்டி கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருப்பதால், 8.47 எம்எம் தடிமனுடன் கிடைக்க இருக்கிறது.
அதேபோல 226 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆகவே, கையில் பிடிக்கும்போது கொஞ்சம் பெரிய மாடலாகவே இருக்கும். இருப்பினும், பேட்டரி பேக்கப் பல நாட்களுக்கு வரும் என்பதால், அது பெரிய விஷயமாக இருக்காது. இதுவரையில் பார்த்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவையாக இருக்கிறது. இப்போது, கசிந்த மற்ற பீச்சர்களை பார்ப்போம்.
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OPPO A7 Pro Max Specifications): 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலுஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Qualcomm Snapdragon 4 Gen 5) சிப்செட் கொடுக்க இருக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா + 50 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் வெளியாக இருக்கிறது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications