10000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த ஒப்போ.. எந்த மாடல்? என்ன விலை?
ஒப்போ நிறுவனம் இன்று ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் (OPPO A7 Pro Max) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஒப்போ போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும். இப்போது ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OPPO A7 Pro Max Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 × 1272 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 10-பிட் கலர், 1800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Snapdragon 4 Gen 5) சிப்செட் உடன் ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ ஜி629 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
ColorOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி monochrome சென்சார் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேவும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
10000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 2,199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.31,053)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 2,699 Yuan (இந்திய மதிப்பில் ரூ.38,115)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 2,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.42,365)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications