OPPO போட்ட ஒரே போடு.. 10000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஓப்போ (OPPO) பிரியர்களுக்கு இதுவரையில் கிடைக்காத பேட்டரி கேபாசிட்டியுடன் ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் (OPPO A7 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. எப்போது வெளியாக இருக்கிறது? முழு பீச்சர்கள் எப்படி இருக்கும்?
ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டது. சீனா மட்டுமல்லாமல், இந்திய மார்கெட்டிலும் வெளியாகி இருக்கிறது. இதனால், ஓப்போ ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் இதைவிட பெரிய பேட்டரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதில் ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஒருபடி மேலே சென்று 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த பேட்டரி கேபாசிட்டியை ஓப்போ நிறுவனமே உறுதி செய்துவிட்டது. வழக்கம்போல முதலில் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆனால், வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
ஓரிரு வாரங்களில் சீன மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். 10000mAh பேட்டரி மட்டுமல்லாமல், டிசைனும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனைவிட பெரிய கேமரா பம்ப் கிடைக்க இருக்கிறது. அதேபோல நைட்போட்டோகிராபிக்காக சர்க்குலர் எல்இடி லைட் கிடைக்க இருக்கிறது.
லைட் ப்ளூ கலரில் வெளியாக இருக்கிறது. இந்த டிசைன் விவரங்களை ஓப்போ நிறுவனமே போஸ்டர் வழியாக உறுதி செய்துள்ளது. இந்த பேட்டரி மற்றும் டிசைன் விவரங்கள் போக டிஸ்பிளே, கேமரா, சிப்செட், ஓஎஸ் உள்ளிட்ட பீச்சர்கள் சீன மார்கெட்டில் கசிந்துள்ளன. இதை ஓப்போ நிறுவனம் உறுதி செய்யவில்லை.
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OPPO A7 Pro Max Specifications): 50 எம்பி மெயின் கேமரா + ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. 2 எம்பி செகண்டரி கேமரா உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி ஃப்ரன்ட் கேமராவை இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.
6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்படுகிறது.
10000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.47 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. மொத்தமாக 226 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Snapdragon 4 Gen 5) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கப்பட உள்ளது.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் அறிமுக விலை ரூ.21,999 ஆக இருந்தது. ஆகவே, இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும்பட்சத்தில் ரூ.25,000 முதல் ரூ.30,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. சீன வெளியீட்டுக்கு பிறகு விவரம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications