OPPO ஒரே போடு.. 10000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. புது Pro Max ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படி 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் (OPPO A7 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, பேட்டரி மட்டுமல்லாமல், சிப்செட், கேமரா உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.
ஓப்போ நிறுவனத்தின் ஏ சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் கிடைக்கும். ஆனால், விலை பட்ஜெட்டில் இருக்கும். இந்த லிஸ்ட்டில் 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் களமிறங்க இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கசிந்துள்ளது. சொல்லப்போனால், ஏ சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாகவும் இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் இருக்கப் போவது தெரிகிறது. சீனாவில் முதலில் வெளியாகும். பிறகு குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OPPO A7 Pro Max Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.47 எம்எம் தடிமன் மற்றும் 226 கிராம் எடை கொடுக்க இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Qualcomm Snapdragon 4 Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. இந்திய மார்கெட்டில் ஓப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதால், மேக்ஸ் மாடலையும் இங்கு எதிர்பார்க்கலாம்.
ஓப்போ ஏ6 ப்ரோ அம்சங்கள் (OPPO A6 Pro Specifications): 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 15 கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுத்துள்ளது. ஆகவே, ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்க இருப்பது தெரிகிறது. இந்தியாவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 21,999 ஆக இருக்கிறது. ஆகவே, ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் இங்கு வெளியானால், ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருக்கும்.


Click it and Unblock the Notifications