ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதன் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்;கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ7 டிஸ்பிளே:
ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ7 சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு பசுமை, தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ7 சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ7 கேமரா:
ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடகம். குறிப்பாக எச்டிஆர் மோட் மற்றும்n செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இந்த சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி,
4ஜி வோல்ட்இ, டூயல்-சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications