Home
Mobile

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஆர்17 ப்ரோ மற்றும் ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒப்போ ஆர்17 ப்ரோ மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது ஒப்போ ஆர்17 ப்ரோ மாடலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2280x1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன்:

ஸ்னாப்டிராகன்:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 என்.எம் செயலியை கொண்டுள்ளது, பின்பு கலர் ஒ.எஸ் 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் மற்றும் 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு

சேமிப்பு

இந்த சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் 0.41 நொடிகளில் அன்லாக் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைபை, டூயல் 4ஜி வோல்ட்இ,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A7 4GB RAM Variant, Oppo R17 Pro Price in India Cut by Up to Rs. 10000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X