ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடகம்.

|

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைத்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனின்
முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பல சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு பசுமை, தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடகம். குறிப்பாக எச்டிஆர் மோட் மற்றும்n செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி, 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Oppo A7 3GB RAM Variant Price in India Cut, Now Starts at Rs. 13,990: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X