Home
Mobile

இவ்வளவு கம்மி விலையா? 6500mAh பேட்டரி..13எம்பி கேமரா.. வருகிறது புது Oppo போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ6எக்ஸ் (Oppo A6x) ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய ஒப்போ ஏ6எக்ஸ் போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ6எக்ஸ் போன் ரூ.12,499 விலையில் அறிமுகமாகும் என்று என்று கூறப்படுகிறது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 விலையில் அறிமுகமாகும்.

இவ்வளவு கம்மி விலையா?  வருகிறது புது Oppo போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ6எக்ஸ் அம்சங்கள் (Oppo A6x Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி சிப்செட்(MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்

அதுவும் 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில்120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் 13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம்Q பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6x India price and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X