அந்த தங்கத்த தூக்குங்க.. ரூ.12,499 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை மாடலாக ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி (OPPO A6x 5G) வெளியாகி இருக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A6x 5G Specifications): 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 1125 நிட்ஸ் எச்பிஎம் மோட் கொண்டுள்ளது.

16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கிடைக்கிறது. இதில் ஆட்டோ போகஸ் வருகிறது. 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த விலைக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்க மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 (ARM Mali G57 MC2) ஜிபியு உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கொண்டுள்ளது. இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOCT Fast Charging) கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.6 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது.
அதேபோல 212 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் உள்ளது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது. விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. 4 ஜிபி, மற்றும் 6 ஜிபி ரேம் மாடல்களில் கூடுதலாக விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்படும்.
மேலும், சைடு ஃபிங்கர்பிரண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மட்டுமல்லாமல், பிராக்சிமிட்டி சென்சார் (Proximity Sensor) கிடைக்கிறது. இதுபோக ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. 5ஜி என்ஆர் (NR) கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கிடைக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.
டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0) மற்றும் ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. அவுட்டோர் மோ் 2.0 (Outdoor Mode 2.0) மற்றும் க்ளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி விலை (OPPO A6x 5G Price): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. ஓப்போ இந்தியா, அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கேமரா பீச்சர்களை பொறுத்தவரையில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching), ஏஐ பர்ஃபெக்ட் ஷாட் (AI Perpect Stot) போன்ற ஏஐ கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








