ரூ.12000 பட்ஜெட்ல மாஸ் காட்டும் புது OPPO போன்.. 8.58 மிமீ ஸ்லிம் பாடியில் 5ஜி, 6500mAh பேட்டரி, IP64!
ஒப்போ நிறுவனம் ஆனது பிரீமியம் / பிளாக்ஷிப் பிரிவின் கீழ் அதன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Oppo Find X9 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில், இந்திய சந்தைக்கான புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அது ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி (Oppo A6x 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது கூடிய விரைவில், இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக, குறிப்பிட்ட ஒப்போ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது.

எக்ஸ் (X) தளம் வழியாக, டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்ட்ரோரேஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்ட்ரோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்ட்ரோரேஜ் ஆகிய 3 ஆப்ஷனகளில் அறிமுகம் செய்யப்படலாம்
மேற்கண்ட ஆப்ஷன்களின் விலைகள் முறையே ரூ.12,499, ரூ.13,499 மற்றும் ரூ.14,999 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விலையில் ஏதேனும் தள்ளுபடிகள் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை அறிமுக சலுகைகளின் கீழ் ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் குறைக்கப்பட்டால், நிச்சயம் இது இந்திய மொபைல் மார்க்கெட்டில் சலசலப்பை கிளப்பும்.
ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்காலம்?
- எச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 13எம்பி டூயல் ரியர் கேமரா
- 5எம்பி செல்பீ கேமரா
- 6,500mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- அளவீட்டில் 8.58மிமீ பாடி
- எடையில் 212 கிராம்
சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே கலர்களில் கிடைக்கும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அதே நேரத்தில் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் மெயின் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது. மறுகையில் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் கலர்களில் வாங்க கிடைக்கிறது
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.09,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ஒப்போ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.
சலுகைகளை பொறுத்தவரை எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, கோடக் வங்கி அல்லது ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கினால் 10 சதவீதம் வரை உடனடி கேஷ்பேக்கை பெறலாம்.
நோ -காஸ்ட் இஎம்ஐ திட்டங்கள் (No Cost EMI Plans) 24 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. மேலும் பஜாஜ் பின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், எச்டிபி நிபைனான்சியல் சர்வீசஸ், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி மற்றும் பூனவல்லா ஃபின்கார்ப் வாடிக்கையாளர்கள் ஜீரோ-டவுன்-பேமெண்ட் திட்டங்களை (Zero Down Payment Plans) பெறலாம்.


Click it and Unblock the Notifications