6500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மட்ட ரேட்ல ரெடியாகுது புது ஓப்போ 5G போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக ஓப்போ ஏ60எக்ஸ் 5ஜி (OPPO A6x 5G) களமிறங்க இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாகவும் இருக்கப் போகிறது. இந்த ஓப்போ ஏ60எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் வெளியாகியது. ரூ.13,999 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்ததால், மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பீச்சர்கள் அடங்கிய போஸ்டர் கசிந்துள்ளது.

இதை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைன் மற்றும் இந்த செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், அதிக பேட்டரி கேபாசிட்டியை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A6x 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி மாடலை போலவே 2 கலர்களில் வெளியாக இருக்கிறது. இதில் ப்ளூ மற்றும் கிரே ஷேட்களை பார்க்க முடிகிறது. டூயல் கேமரா டிசைன் இருக்கிறது. மெட்டாலிக் பினிஷிங் லைக் ஃபிரேம் உள்ளது.
இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைத்ததால், இதை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். அதிலும் ஆரம்ப விலை வேரியண்ட் மேலும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாகும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி மாடலின் பீச்சர்களை பார்க்க வேண்டும். இதில் இருந்து சில அப்கிரேட்கள் அதில் கிடைக்கும். இந்த ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (Color OS 15) கிடைக்கிறது. ஆகவே, ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (Color OS 16) எதிர்பார்க்கலாம். 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி உள்ளது.
32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் பேட்டரி மட்டும் 6500mAh ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் சார்ஜிங்கில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆகவே, சிப்செட், ரேம் மற்றும் ஓஎஸ் ஆகியவற்றில் மாற்றங்களை பார்க்கலாம். ரூ.15,000 பட்ஜெட்டில் 6500mAh பேட்டரியில் பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆகவே, இதில் ஏதாவதொரு ஹைலைட் பீச்சர் இருக்க வாய்ப்புள்ளது. இதுவும் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஓப்போ 15 சீரிஸ் அடுத்து வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








