வெளுத்துக் கட்டும் அமேசான்.. 6500mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஒப்போ ஏ6எஸ் 5ஜி (OPPO A6x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்;க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ6எஸ் 5ஜி போனுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.900 தள்ளுபடி உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி அம்சங்கள்(OPPO A6x 5G Specifications): ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி போன் 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் , 1152 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoos 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perpect Shot), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) மற்றும் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
அதுவும் ஒப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance)ஆதரவும் இதில் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன. ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications