Home
Mobile

இந்த OPPO போனை ஊரே வாங்க போகுது.. இவ்ளோ கம்மி விலைக்கு 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 8GB ரேம், IP69-ஆ!

ரெட்மி, ரியல்மி ஆகிய 2 நிறுவனங்களுமே எக்கச்சக்கமான டீசர்கள் மற்றும் விளம்பரகளுடன் இன்று (ஜனவரி 6) தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை (ரியல்மி 16 சீரீஸ், ரெட்மி நோட் 15 சீரீஸ்) அறிமுகம் செய்யவுள்ள நிலையில்.. ஒப்போ நிறுவனமானது சைலன்ட் ஆக தனது லேட்டஸ்ட் 5ஜி, 4ஜி மாடல்களை அறிமுகம் செய்து இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளது.

7000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங், 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, டிமென்சிட்டி 6300 சிப்செட் ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி (Oppo A6 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது "சைலன்ட் ஆக" இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.21,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய OPPO போன்.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 8GB ரேம், IP69!

புதிய 5ஜி மாடல் வெளியான வேகத்தில் அதே ஒப்போ ஏ6 சீரீஸின் கீழ் இன்னொரு புதிய 4ஜி மாடலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஒப்போ ஏ6எஸ் 4ஜி (Oppo A6s 4G) ஸ்மார்ட்போன் ஆகும். சுவாரசியமாக இதுவும் ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி மாடலை போலவே 7000mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது.

ஒப்போ ஏ6எஸ் ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்: ஒப்போ நிறுவனத்தின் உலகளாவிய வலைத்தளத்தின்படி, ஒப்போ ஏ6எஸ் மாடல் ஆனது டூயல் சிம் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 கொண்டு இயங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரெட், 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட்,உடனான 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 8GB LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது; இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ ஏ6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது அதில் எப்/1.8 அபெர்க்ஷர், ஆட்டோஃபோகஸ் மற்றும் 76-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. கூடவே எப்/2.4 அபெர்க்ஷர் மற்றும் 89-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமராவும் உள்ளது

முன்பக்கத்தில் 85-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 16-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1080பி ரெசல்யூஷன் வீடியோக்களை 30fps ஸ்பீடில் பதிவு செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டப்படி இது 80W சூப்பர்வூக் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த போன் 166.61x78.51x8.61 மிமீ மற்றும் எடையில் சுமார் 215 கிராம் உள்ளது. விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒப்போ ஏ6எஸ் ப்ரோ 5ஜி மாடல் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஒப்போ ஏ6எஸ் 4ஜி மாடலானது பெரும்பாலும் ரூ.10,000 - ரூ.15,000 க்குள் தான் இருக்கும்.

ரூ.21,999 என்பது ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷனின் விலையாகும். இதே ஸ்மார்ட்போன் 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். அதன் விலை நிர்ணயம் ரூ.23,999 ஆகும்.

அறிமுக சலுகையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் நேரடியாக ஒப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்கலாம். இது அரோரா கோல்ட் மற்றும் கப்புசினோ பிரவுன் ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது..

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6s With 7000mAh Battery 80W Fast Charging IP69 Rating Announced Just After Oppo A6 Pro 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X