Home
Mobile

அப்படி போடு OPPO.. 7000mAh பேட்டரி, 12GB ரேம் காம்பினேஷனில் புது 5G போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஒப்போ (OPPO) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ஒப்போ ஏ6எஸ் ப்ரோ (Oppo A6s Pro) மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் லுக் ஆனது, இந்தியா உட்பட உலகளாவிய சந்தைக்கு வரவிருக்கும் ஒப்போ எப்33 ப்ரோ (Oppo F33 Pro) மாடலுடன் ஒற்றுப்போகிறது.

ஆக ஒப்போ ஏ6எஸ் ப்ரோவை அடிப்படையாக கொண்டு தான் ஒப்போ எப்33 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது. சரி வாருங்கள் ஒப்போ ஏ6எஸ் ப்ரோ என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்:

7000mAh பேட்டரி, 12GB ரேம் காம்பினேஷனில் புது OPPO 5G போன்!

ஒப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: ஒப்போ ஏ6எஸ் ப்ரோ 2372 x 1080 பிக்சல் ரெசல்யூஷனுடன் கூடிய 6.57 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது "காம்பாக்ட்" ஆன சைஸில் ஷார்ப் ஆன விஷூவலை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிடைமட்ட கேமரா மாட்யூலுடன், க்ளீன் ஆன டிசைனை பெற்றுள்ளது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் கலவையை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயங்குகிறது. பல வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. வாங்குபவர்கள் 8GB அல்லது 12GB ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை தேர்வு செய்யலாம், மேலும் 256GB வரை கூடுதல் விரிவாக்கத்திற்கான ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7,000mAh அளவிலான பெரிய பேட்டரி உள்ளது மற்றும் இது 80W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஒப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒப்போவின் கலர்ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.

ஒப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை, ப்ளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி மற்றும் ப்ராக்சிமிட்டி, லைட், கிராவிட்டி மற்றும் டைரெக்ஷன் சென்சிங் போன்ற பல சென்சார்கள் உள்ளன. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனரும் இதில் உள்ளது. அளவீட்டில் இது 8.32மிமீ தடிமனை கொண்டுள்ளது மற்றும் எடையில் சுமார் 193 கிராம் உள்ளது.

ஒப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: ஒப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உட்பட பல ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் லக்கி லோட்டஸ் (Lucky Lotus), மூன்லைட் நைட் (Moonlit Night) மற்றும் அசூர் ஸ்கை (Azure Sky) என்று பெயரிடப்பட்ட மூன்று கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும், இது சீனாவில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்தியாவில் இது ஒப்போ எப்33 ப்ரோவாக (விரைவில்) அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6s Pro 5G with 7000mAh battery Launched in China Could be Launch in India as Oppo F33 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X