Home
Mobile

சம்பவம் லோடிங்.. 5860mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. களமிறங்கும் புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ6ஐ 5ஜி (Oppo A6i 5G) எனும் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 9-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்போ ஏ6ஐ 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

ஒப்போ ஏ6ஐ 5ஜி அம்சங்கள் (Oppo A6i 5G Specifications): 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ ஏ6ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனின் டிஸ்பிளேவில் 720 × 1604 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சம்பவம் லோடிங்.. களமிறங்கும் புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ6ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமி என மூன்று வேரியண்ட்களில் ஒப்போ ஏ6ஐ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் வசதியுடன் ஒப்போ ஏ6ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ஒப்போ ஏ6ஐ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

5860mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ6ஐ 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செயற்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ ஏ6ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அதுவும் இந்த புதிய ஒப்போ போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன. பின்பு இந்த புதிய ஒப்போ ஏ6ஐ 5ஜி போனின் எடை 200 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: thetechoutlook, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6i 5G launch date and specifications revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X