வெளுத்து கட்டிய பட்ஜெட்.. ரூ.13999 போதும்.. 7000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக ஓப்போ ஏ6சி (OPPO A6c) சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.14,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, ஐபி64 வாட்டர் ரேட்டிங் போன்ற பக்கா பீச்சர்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ16 சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களின் மீது ஒட்டுமொத்த ஓப்போ பிரியர்களின் கவனமும் இருந்தது. ஏனென்றால், ஓரிரு வாரங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல், நேரடியாக இந்திய மார்கெட்டில் ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருப்பதால், கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி இருக்கிறது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. இதற்கு மேலும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் பக்காவாக இருக்கும். 36 மாதங்களுக்கு ப்ளூயன்சி புரொடெக்சன் கொடுக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவும் கிடைக்க இருக்கிறது.
நேச்சுரல் ஸ்டோன் மற்றும் பர்ட் அவுட்லுக் கொடுக்கும்படி பேக் பேனல் கிடைக்கிறது. கேமராவில் ஃபிளாக்சிப் ஹரிசோன்டல் டெக்கோ வருகிறது. ஆர்-கார்னர் (R-Corner) டிசைன் கிடைப்பதால், கர்வ் பாடியை பார்க்க முடிகிறது. 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. கேமராவிலும் பக்கா பீச்சர்களை பார்க்க முடிகிறது.
போர்ட்ராய்டு மோட், நைட் மோட், ரீடச் (Retouch) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்பிளாஷ் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஆகவே, ஐபி64 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

ஓப்போ ஏ6சி அம்சங்கள் (OPPO A6c Specifications): 6.75 இன்ச் (720 x 1570 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஓப்போ போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 256 பிபிஐ பிக்சல் சென்சிட்டி கொடுக்கப்படுகிறது.
ஆக்டா கோர் யுனிசோக் டி7250 (Octa Core Unisoc T7250) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபிய (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்/2.2 அபெர்சர் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. எப்/2.0 அபெர்சர் கொண்ட 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளது. 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 5 கனெக்டிவிட்டிகளை இந்த ஓப்போ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
ஓப்போ ஏ6சி விலை (OPPO A6c Price): 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் ஸ்டோன் பிரவுண் (Stone Brown) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஓப்போ ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications