Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 6500mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. அறிமுகமானது புது Oppo போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ6சி (Oppo A6c) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ஏ6சி அம்சங்கள் (Oppo A6c Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் பிளாட் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ6சி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1570×720 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் பிரைட்னஸ், விவிட் மோட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (touch sampling rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

அதிர போகுது மார்க்கெட்.. அறிமுகமானது புது Oppo போன்.. எந்த மாடல்?

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 எஸ்ஒசி (Qualcomm Snapdragon 685 SoC) சிப்செட் உடன் ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலா மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

10X டிஜிட்டல் ஜூம் ஆதரவு கொண்ட 13எம்பி ரியர் கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன.

ஃபேஸ் அன்லாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

டூயல் சிம், 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ஜிபிஎஸ், புளூடூத், ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஒப்போ ஏ6சி போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த ஸ்மர்ட்போனின் எடை 210 கிராம் ஆகும். குறிப்பாக இந்த புதிய ஒப்போ ஏ6சி ஸ்மார்ட்போனின் விலை CNY 799 (ரூ.10,346)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6c with 6000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X