Home
Mobile

OPPO ஒரே போடு.. 43 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் போட்டிப் போட்டு ஆர்டர் செய்யும்படியான தள்ளுபடி விலைக்கு ஓப்போ ஏ6சி (OPPO A6c) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதிக பேட்டரி கேபாசிட்டியை பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் பக்காவாக இருக்கும். தள்ளுபடி, விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 43 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.16,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.850 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,149 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கிப்ட் வவுச்சர், ஈஎம்ஐ சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன.

OPPO ஒரே போடு.. 43 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஓப்போ ஏ6சி அம்சங்கள் (OPPO A6c Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 (Octa Core Unisoc T7250) சிப்செட்டை இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி57 ஜிபிய (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொண்ட மாடலாக கிடைக்கிறது.

இதில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), ரீடச் (Retouch) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் வருகின்றன. மேலும், ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) போன்ற பீச்சர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது.

இந்த பேட்டரியுடன் 9 எம்எம் தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொண்டுள்ளது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டியை கொடுக்கிறது. இந்த 6 வருடங்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கிடைக்கும். கேமிங் பிரியர்களுக்காக 36 மாதங்களுக்கு ப்ளூயன்சி புரொடெக்சன் கிடைக்கிறது. ஆர்-கார்னர் (R-Corner) டிசைனில் கர்வ் பாடி கொடுக்கிறது.

ஆனால், பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் (720 x 1570 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 256 பிபிஐ பிக்சல் சென்சிட்டி மற்றும் ஸ்பிளாஷ் டச் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ6சி இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் எப்/2.2 அபெர்சர் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைத்து இருக்கிறது. 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 5 ஆகிய கனெக்டிவிட்டிகளை பெற்று கொள்ளலாம். ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் ஸ்டோன் பிரவுண் (Stone Brown) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
OPPO A6c With 4 GB RAM Available At 43 Percent Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X