Home
Mobile

கிடைச்சிருச்சு ப்ரோ.. வெறும் ரூ.22,199-க்குள்ள 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்த பட்ஜெட்டுக்குத்தான எதிர்பார்த்தோம் என்று இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் சொல்லும்படியான விலைக்கு புதிய ஓப்போ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 50 கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஓப்போ ஏ6 ப்ரோ (OPPO A6 Pro) வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் செப்டம்பர் 15ஆம் தேதி இதே ஸ்மார்ட்போனானது ஓப்போ எப்31 ப்ரோ (OPPO F31 Pro) மாடலாக வெளியாக இருக்கிறது. இதனால், முன்கூட்டியே பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரியவந்துள்ளதால், இந்தியாவில் இருக்கும் ஓப்போ பிரியர்கள் குஷியாகிவிட்டனர்.

கிடைச்சிருச்சு.. வெறும் ரூ.22,199-க்குள்ள 7000mAh பேட்டரி.. மாடல்?

ஓப்போ ஏ6 ப்ரோ அம்சங்கள் (OPPO A6 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் லேட்டஸ்ட் மாடல்களில் வரும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.

அதேபோல ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் மற்றும் யுஐ எதிர்பார்க்க முடியும். 4 வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. கேமராவில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. ஆனால், குவாட் கேமரா சிஸ்டம் போல டிசைனை கொடுக்கிறது. டியூரபிலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

கிடைச்சிருச்சு.. வெறும் ரூ.22,199-க்குள்ள 7000mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, அலாய் ஃபிரேம் மற்றும் ஓப்போ கிரிஸ்டல் சீல்டு (OPPO Crystal Shield) பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், MIL-STD-810H என்னும் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷனை கொடுக்கிறது.

இந்த சர்டிபிகேஷன் மூலம் டிராப் ரெசிஸ்டன்ட், ஷாக் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போனை கேமிங் மாடலாக பார்க்க முடிகிறது. ஏனென்றால், அதிகப்படியான பேக்கப் கொடுக்கும்படி 7000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. மேலும், 4300mm வேப்பர் கூலிங் சேம்பர் கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. அதேபோல ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கிறது.

இந்த ஓப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.22,199ஆக இருக்கிறது. இந்த விலையுடன் சீனாவில் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 12ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இதே ஸ்மார்ட்போன் ஓப்போ எப்31 ப்ரோ மாடலாக வெளியாக இருக்கிறது. இங்கும் இதே பட்ஜெட் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
OPPO A6 Pro With 7000mAh Battery 50MP Camera Launched Sale From September 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X