Home
Mobile

மிரண்டு போன மார்கெட்.. 7000mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. புது OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் பட்ஜெட் விலை 7000mAh பேட்டரி மாடலாக ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 120 Hz டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களிலும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் மார்கெட்டில் இந்த ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமான போதே இந்தியாவில் இருக்கும் ஓப்போ பிரியர்கள் வெயிட்டிங் செய்ய தொடங்கிவிட்டனர். ஏனென்றால், பட்ஜெட் விலையில் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களில் மிரளவிட்டிருந்தது. இப்போது, இந்திய மார்கெட்டிலும் பட்ஜெட் விலையிலேயே அறிமுகமாகி உள்ளது.

மிரண்டு போன மார்கெட்.. 7000mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங் மாடல்!

ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A6 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது.

கலர் ஓஎஸ் 15 (ColorOS 15) மாடலாக இருக்கிறது. ஏஐ கேம் பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0), ஏஐ லிங்க் பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) கொண்டுள்ளது. ஓப்போ போன்களில் கிடைக்கும் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) இந்த ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிலும் கிடைக்கிறது. மேலும், லூமினஸ் ரென்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கொடுக்கப்பட்டு உள்ளது.

6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. 1125 எச்பிஎம் பிரைட்னஸ் உள்ளது. அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0 ) உள்ளது. 240 Hz சாம்பிளிங் ரேட், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைத்துள்ளது.

மேலும், குளோவ் டச் (GloveTouch) கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் எக்ஸ்பான்சன் கிடைத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோ குரோம் கேமராவை கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கிடைத்துள்ளது.

அண்டர் வாட்டர் போட்டோகிராபி மோட் (Underwater Photography Mode), ஏஐ நைட் மோட் (AI Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot) பீச்சர்களை இந்த கேமரா கொடுக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7000mAh பேட்டரி கொண்டுள்ளது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), அல்ட்ரா வால்யூ மோட் (Ultra Volume Mode) கொடுத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 21,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும் உள்ளது. ரூ.2,000 தள்ளுபடி போக அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ தளங்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A6 Pro 5G With 7000mAh Battery Launched in India Available on Amazon Rs 2000 Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X