மார்க்கெட்டே மிரள போகுது.. 80W சார்ஜிங்.. ஆண்ட்ராய்டு 15 OS.. வருகிறது புதிய OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ போன் CPH278 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A6 Pro 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300(MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு, 8ஜிபி ரேம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி (OPPO A5 Pro 5G) போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A5 Pro 5G specifications): ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300(Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல்ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.67 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங், லைவ்போட்டோ, ஏஐ எரைசர், ஏஐ அன்பிளர் போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி மெயின் + 2 எம்பி மோனோகுரோம் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. மேலும் 4கே வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.
5800mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி மாடல். தற்போது இந்த ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி போன் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








