ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் நேற்று ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி (OPPO A5 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது இந்த ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்ய்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மாரட்போனை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A5 Pro 5G specifications): இந்த ஒப்போ போன் 6.67 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது . மேலும் இந்த டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50 எம்பி மெயின் + 2 எம்பி மோனோகுரோம் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. மேலும் 4கே வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங், லைவ்போட்டோ, ஏஐ எரைசர், ஏஐ அன்பிளர் போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
ஃபெதர் ப்ளூ (Feather Blue) அல்லது மோச்சா பிரவுண் (Mocha Brown) நிறங்களில் இந்த ஒப்போ போனை வாங்க முடியும். இதுபோக டேமேஜ் ப்ரூப் 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது. 14 மிலிட்டரி கிரேடு டெஸ்ட்களை பாஸ் செய்துள்ளது இந்த போன். இதுதவிர பல அசத்தலான அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி மாடல். 5800எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








