Home
Mobile

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 7000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. புதிய Oppo போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி (Oppo A6 Pro 4G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 7000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஐபி69 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Oppo A6 Pro 4G Specifications): 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080×2,372 பிக்சல்ஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..  புதிய Oppo போன் அறிமுகம்.. எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி100 (MediaTek Helio G100) சிப்செட் உடன் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் போன்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியுடன் ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) வசதியும் இந்த ஒப்போ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். கோரல் பிங்க் ( Coral Pink), லூனார் டைட்டானியம் (Lunar Titanium), ரோஸ்வுட் ரெட் (Rosewood Red) மற்றும் ஸ்டெல்லர் ப்ளூ (Stellar Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் ஸ்பீக்கர்கள், இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன.

ஆனால் ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் தற்போது வியட்நாமில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ6 ப்ரோ 4ஜி போனின் விலை VND 8,290,000 (இந்திய மதிப்பில் ரூ.27,900)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A6 Pro 4G launched with 7000mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X