Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புது Oppo 5ஜி போன்.. ஒஎல்இடி டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ தற்போது புதிய ஒப்போ ஏ6 மேக்ஸ் (Oppo A6 Max) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஒப்போ போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் 7000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ ஏ6 மேக்ஸ் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ6 மேக்ஸ் அம்சங்கள் (Oppo A6 Max Specifications): 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ6 மேக்ஸ். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 × 1280 பிக்சல்ஸ், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm's Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் ஒப்போ ஏ6 மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ6 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த ஒப்போ ஏ6 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதி இந்த போனில் உள்ளது. குறிப்பாக IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

7000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ6 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேட்டரி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை 24 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.

5,200mm² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமை (Vapor chamber cooling system) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ6 மேக்ஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும். எனவே இந்த ஒப்போ ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

டூயல் பேண்ட ஜிபிஸ், என்எப்சி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ ஏ6 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளது. ஆகவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கலர்ஓஎஸ் 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ6 மேக்ஸ் போனின் விலை 1,599 yuan (இந்திய மதிப்பில் ரூ.19,734)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credit: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6 Max launched with 7000mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X