OPPO ஒரே போடு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஓப்போ ஏ6 5ஜி (OPPO A6 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜனவரி 5 ஆம் தேதி 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், ரூ.20,000 மேல் பட்ஜெட் இருந்ததால், மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்கள் ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனுக்கு காத்திருக்க தொடங்கினர். ஏனென்றால், இந்த போன் ரூ.20,000 பட்ஜெட்டை விட மலிவாக கிடைக்கும்.

இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. எதிர்பார்த்ததை போலவே ஆரம்ப விலை மாடல் ரூ.20,000 பட்ஜெட்டைவிட மலிவாகவே இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ப்ரோ மாடலில் கிடைத்ததை போலவே 7000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொடுத்து உள்ளது. முழு பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
ஒப்போ ஏ6 5ஜி அம்சங்கள் (OPPO A6 5G Specifications): 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர் ஓஎஸ 15 (ColorOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. மூன்று வேரியண்களை கொடுத்து இருக்கிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கிறது. சூப்பர்கூல் விசி சிஸ்டம் (SuperCool VC System) கொடுத்துள்ளது. ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0), ஏஐ லிங்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. சகுரா பிங்க் (Sakura Pink), ஐஸ் ஒயிட் (Ice White) மற்றும் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் அல்ட்ரா வால்யூம் மோட் (Ultra Volume Mode) கொடுத்துள்ளது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999 ஆக உள்ளது. ஓப்போ ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








