செம்ம ஆஃபர்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொண்ட பட்ஜெட் மாடலாக ஓப்போ ஏ6 5ஜி (OPPO A6 5G) அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், அண்டர்வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும் கேமரா, எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களிலும் மிரளவிட்டது. இப்போது, தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு 23 சதவீத தள்ளுபடியானது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.23,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே, ரூ.22,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சகுரா பிங்க் (Sakura Pink), ஐஸ் ஒயிட் (Ice White) மற்றும் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய மூன்று கலர்களில் இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். 60 மாதங்களுக்கான ப்ளூயன்சி புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், 3900 மிமீ சூப்பர்கூல் விசி கூலிங் சிஸ்டம் கொடுத்துள்ளது. மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன.
ஓப்போ ஏ6 5ஜி அம்சங்கள் (OPPO A6 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) கிடைக்கிறது. மேலும், குளோவ் டச் (Glove Touch) கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது.
ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.
வழக்கம்போல 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கிடைக்கிறது. ஆனால், இதில் அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளது.
மேலும், கேமராவில் ஏஐ பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. இதில் ஏஐ நைட் மோட் (AI Night Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouch) மற்றும் ஏஐ பெர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot) மற்றும் ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) கிடைக்கிறது. வழக்கமான ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளது. கிடைத்துள்ளது.
மற்ற ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 2.0) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ஓப்போ ஏ6 5ஜி கொடுக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 8.6 மிமீ தடிமன் மற்றும் 216 கிராம் எடை வருகிறது.


Click it and Unblock the Notifications