ஆளுக்கு 2 ஆர்டர்.. ஆஃபரில் OPPO 5ஜி.. 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு ஓப்போ ஏ6 5ஜி (OPPO A6 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா, ஐபி69 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.900 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.17,099 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும்.

ஓப்போ ஏ6 5ஜி அம்சங்கள் (OPPO A6 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்டுள்ளது.
6.75 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஓப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) மற்றும் குளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைத்துள்ளது.
2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டு உள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி மோட் (Underwater Photography Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ நைட் மோட் (AI Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouch) மற்றும் ஏஐ பெர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) கிடைத்துள்ளது. இதுபோக ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 2.0) மற்றும் டிரினிட்டி என்ஜின் கிடைத்துள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபிக்காக IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் அல்ட்ரா வால்யூம் மோட் (Ultra Volume Mode) உள்ளது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. பெரிய பேட்டரி வருவதால், 8.6 எம்எம் தடிமன் மற்றும் 216 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.
சகுரா பிங்க் (Sakura Pink), ஐஸ் ஒயிட் (Ice White) மற்றும் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications