சோலி முடிஞ்சு.. ரூ.20000, ரூ.25000, ரூ.35000.. எல்லா பட்ஜெட்டிலும் விலை உயர்த்தப்பட்ட 3 OPPO 5ஜி போன்கள்!
பெரும்பாலான பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், ஒப்போ (OPPO) நிறுவனமானது அதன் மிட்-ரேன்ஜ் (Mid-range) பிரிவின் கீழ், ரூ.20,000, ரூ.25,000 மற்றும் ரூ.35,000 ஆகிய பட்ஜெட்களில் வாங்க கிடைத்த 3 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
அவைகள் ஒப்போ ஏ6 5ஜி (OPPO A6 5G), ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி (OPPO A6 Pro 5G) மற்றும் ஒப்போ எப்33 5ஜி (OPPO F33 5G) ஆகிய மாடல்கள் ஆகும். கவனிக்கத்தக்க வண்ணம், ஒப்போவின் இந்த 3 5ஜி ஸ்மார்ட்போன்களுமே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், ஒப்போ எப்33 மாடலை தவிர மற்ற 2 மாடல்களின் விலைகள் மாற்றியமைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்த 3 ஸ்மார்ட்போன்களின் பெரும்பாலான வேரியன்டுகளின் விலை ரூ.2,000 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒப்போ எப்33 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனின் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள்:
4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.17,999 க்கு அறிமுகமானது, பின்னர் ரூ. 21,999 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.23,999 ஆக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.19,999 க்கு அறிமுகமானது, பின்னர் ரூ. 23,999 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.25,999 ஆக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
6ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் - ரூ.21,999 க்கு அறிமுகமானது, பின்னர் ரூ. 25,999 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.27,999 ஆக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
ஒப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.21,999 க்கு அறிமுகமானது, பின்னர் ரூ. 26,999 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.28,999 ஆக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் - ரூ.23,999 க்கு அறிமுகமானது, பின்னர் ரூ. 29,999 ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.31,999 ஆக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனின் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள்:
6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.31,999 க்கு அறிமுகமானது, இப்போது ரூ.34,999 ஆக விலை உயர்ந்துள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.34,999 க்கு அறிமுகமானது, இப்போது ரூ.36,999 ஆக விலை உயர்ந்துள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் - ரூ.37,999 க்கு அறிமுகமானது, இப்போது ரூ.39,999 ஆக விலை உயர்ந்துள்ளது.
கிஸ்பாட்டின் கருத்து: விலை உயர்வை தாண்டியும் இந்த ஸ்மார்ட்போன்களை இப்போது வாங்கலாமா? இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. இவைகள் பிளாக்ஷிப்-கிரேட் கேமரா செட்டப்களை விட, பேட்டரி திறன், உறுதியான கட்டமைப்பு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான செயல்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.
அறிமுகத்தின் போது, ஏ6 மற்றும் ஏ6 ப்ரோ ஆகியவை அவற்றின் 7000mAh பெரிய பேட்டரிகள் மற்றும் கவர்ச்சிகரமான விலையினால் தனித்து நின்றன. சமீபத்திய விலை மாற்றங்களுக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் இவற்றை ஐக்யூ இஸட்11எக்ஸ் (iQOO Z11x), போக்கோ எம்8 (POCO M8) மற்றும் ரியல்மி பி4 (Realme P4) சீரிஸ் போன்ற மாடல்களுடன் கவனமாக ஒப்பிட்டு பார்த்து வாங்கவும்.
இதேபோல தான் ஒப்போ எப்33 5ஜி மாடலும். இதை ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6), மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) மற்றும் லேட்டஸ்ட் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) போன்ற வலுவான போட்டியாளர்கள் இருக்கும் விலைப்பிரிவிற்குள் நுழைந்துள்ளது.


Click it and Unblock the Notifications