அசத்திட்டீங்க ஒப்போ.. 7000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ6 5ஜி (Oppo A6 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் 7000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ ஏ6 5ஜி அம்சங்கள் (Oppo A6 5G Specifications): 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2,372×1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டா-கோர்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (octa-core MediaTek Dimensity 6300 chip) உடன் இந்த புதிய ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) வசதி உடன் ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
7000mAh பேட்டரி உடன் இந்த ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி. 4ஜி, ஜிபிஎஸ், கலிலியோ (Galileo), குளோனாஸ் (Glonass), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 185 கிராம் ஆகும். ப்ளூ ஓஷன் லைட் (Blue Ocean Light), வெல்வெட் கிரே (Velvet Gray)மற்றும் பிங்க் நிறுங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
தற்போது ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ.20,000)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications