Home
Mobile

அடுத்த ஒப்போ 5ஜி போன் ரெடி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 512ஜிபி மெமரி.. 6830mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் அடுத்து ஒப்போ ஏ6 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். இந்நிலையில் ஒப்போ ஏ6 5ஜி (Oppo A6 5G) போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ6 5ஜி அம்சங்கள் (Oppo A6 5G Specifications): 6.57-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2372 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அடுத்த ஒப்போ 5ஜி போன் ரெடி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அதேபோல் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் (2.4GHz octa-core processor) உடன் ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளன. அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் புதிய ஒப்போ போன் வெளிவரும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது ஒப்போ ஏ6 5ஜி மாடல். அதேபோல் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

6830mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி. 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ஒப்போ ஏ6 5ஜி மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த புதிய ஒப்போ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: TENAA certification database, thetechoutlook, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A6 5G full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X