Home
Mobile

விட்ராதீங்க சார்.. வெறும் ரூ.13,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற அடிமட்ட விலையில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP65 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, விர்ச்சுவல் ரேம் ஆகியவற்றுடன் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) போன் வெளியாகி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ போனின் முழு பீச்சர்கள் எப்படி? விற்பனை எப்போது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லேட்டஸ்ட் ஓப்போ மாடல்களில் கிடைப்பதை போலவே இந்த மாடலிலும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது. இதுபோக IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட் விலை ரக்கட் மாடலாக இதை பார்க்க முடிகிறது. சிப்செட், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

விட்ராதீங்க சார்.. வெறும் ரூ.13,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): இந்த ஓப்போவில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், குளோபல் மார்கெட்டில் ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென் 1 11என்எம் சிப்செட்டை கொடுக்கிறது. ஆகவே, இந்தியாவில் 5ஜிக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. இந்த லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் மூலம் ஏஐ எரைசர், ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர், ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ் போன்ற பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் (4 ஜிபி + 4 ஜிபி) மற்றும் 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தும்படி சிலாட் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், 32 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. இருப்பினும், ஐஆர் சென்சாருடன் (IR Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓப்போ போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

பேட்டரி சிஸ்டம் பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் கொடுக்கும்படியே இருக்கிறது. ஆகவே, 6000mAh பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், அதற்கு 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்கள் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொண்ட பட்ஜெட் மாடலாக இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி இருக்கப் போகிறது.

இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுக்கிறது. முன்பே சொன்னதை போல IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் மற்றும் 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் 5ஜி என்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.

பிரீமியம் லுக் கொடுக்கும்படி மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் லேசர் ஒயிட் ( Laser White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. ரூ.1,000 அறிமுக சலுகையுடன் மே 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. ஓப்போ ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A5x 5G With 6000mAh Battery Launched in India Sale From May 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X