முரட்டு ஆஃபருங்க இது.. ரூ.11,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP65 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 8 ஜிபி ரேம், 32 எம்பி கேமரா மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.11,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலைக்கு வருகிறது.

இதிலும் ரூ.1,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மல்டிபிள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும் ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ரூ.5,500 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.
மேலும், இந்த சிப்டெட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover), ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ் (AI Clarity Enhance) பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கிடைக்காதபடி 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கிறது.
இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 32 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபைடு மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) கொடுக்கிறது. இதுபோக IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் டியூரபிலிட்டி கிடைக்கும்.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. இதில் 1 டிபிக்கான ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். 5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன.
7.99 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுக்கிறது. ஆகவே, ஓரளவுக்கு ஸ்லிம் பாடி எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இதில் 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் லேசர் ஒயிட் ( Laser White) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டிக்கு பக்கா பேக்கப் கொண்ட மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








