ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,999 பட்ஜெட்ல 360° ஆர்மர் பாடி.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் 360° ஆர்மர் பாடி மட்டுமல்லாமல், IP65 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆட்டோ போகஸ் கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) போனின் விற்பனை டிஸ்கவுண்ட் போக தொடங்கி இருக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் மார்கெட் விலையில் இருந்து மேலும் கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். படஜெட்டில் பட்டையை கிளப்பும் டியூரபிலிட்டி வேண்டுமானால், இந்த ஓப்போவை ஆர்டர் செய்யலாம்.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அமேசான் விற்பனை (OPPO A5x 5G Amazon Sale): இந்த ஓப்போ போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். அதேபோல அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கும் ரூ.1,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களும் ரூ.1,000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ரூ.13,200 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): இந்த ஓப்போ போனில் 6.67 (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. அதேபோல 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது.
32 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + ஐஆர் சென்சார் கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆட்டோ போகஸ், 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த விலையிலும் ஏஐ எரைடர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) கிடைக்கிறது.

அதேபோல ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) வருகிறது. ஆகவே, இந்த பீச்சர்களை கொண்ட கலர்ஓஎஸ் 15 (Color OS 15) வருகிறது. அதேபோல பட்ஜெட்டில் பக்கா 5ஜி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது.
ஆகவே, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி போனின் டியூரபிலிட்டியை பொறுத்தவரை டேமேஜ் ப்ரூஃப் கொடுக்கும்படி 360 டிகிரி ஆர்மர் பாடியுடன் ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Shock Resistance) கிடைக்கிறது. IP65 வாட்டர் ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மற்றும் MIL-STD-810H சர்டிபிகேஷன் உள்ளது.
மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் கிளிட்டரிங் பேனல் கொண்ட லேசர் ஒயிட் (Laser White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய முடியும். மேலும், பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், அல்ட்ரா வால்யூம் மோட் கொண்ட பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், 4 ஜிபிக்கான ரேம் பூஸ்டர் போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








