Home
Mobile

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. IP65 ரேட்டிங்.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிபபாக இந்த ஸ்மார்ட்போன ஐபி65 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்க 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): 6.67 எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கலர்ஓஎஸ் 15 (Color OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு MIL-STD-810H சர்டிபிகேஷன் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

32 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + ஐஆர் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு ஏஐ எரைடர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜி வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லேசர் ஒயிட் (Laser White) நிறங்களில் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
OPPO A5x 5G is available at 23 percent discount on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X