Flipkart குடியரசு தின விற்பனை 2026.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறுது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கலர்ஓஎஸ் 15 (Color OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6.67 எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு MIL-STD-810H சர்டிபிகேஷன் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
அதுவும் 32 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + ஐஆர் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு ஏஐ எரைடர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜி வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லேசர் ஒயிட் (Laser White) நிறங்களில் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








