பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
2ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,990-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று
தான் கூறவேண்டும்.

2ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,990-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் கிரீன் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் விற்பனை அடுத்த
மாதம் முதல் துவங்குகிறது.
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவான 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

இந்த ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் 12என்எம் ஹீலியோ பி35 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இக்கருவி 2ஜிபி/4ஜிபி ரேம் வசதி மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்டபோன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகளுடன் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ5எஸ் சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, யுஎஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications