4230எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் இந்நிறுவனம் புதிய ஒப்போ ஏ5எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் ஆன்லைன்
தளங்களில் விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் 1080 பிக்சர் திர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை
இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
இந்த சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ஒப்போ ஏ5எஸ் சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட்,என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications