ரூ.12,990-விலையில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ்.!

|

ஒப்போ நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 12,990-விலையில் விற்பனைக் கொண்டுவந்துள்ளது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.2-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் டிஸ்பிளே:

6.2-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் டிஸ்பிளே:

ஒப்போ ஏ5எஸ் சாதனம் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 89.5சதவீகிதம் ஸ்கிரீன் ரேஷியோ மற்றும் இயக்கத்திற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அத்தனை அம்சங்களும் இந்த ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. எச்டி வீடியோ, கேமிங் போன்றவைக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும் இந்த ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

4230எம்ஏஎச் பேட்டரி அமைப்பு:

4230எம்ஏஎச் பேட்டரி அமைப்பு:

ஸ்மார்ட்போன்களில் மிக முக்கியமானது பேட்டரி தான்,அதன்படி ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். அதன்படி 4230எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்ஸி-க்கு கடும் எதிர்ப்பு.!பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்ஸி-க்கு கடும் எதிர்ப்பு.!

பின்பு ஏஐ-எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படுகிறது. மேலும் MTK6765 செயலி பயன்படுத்துகிறது ஒப்போ ஏ5எஸ் சாதனம், இதன்மூலம் வீடியோ, கேமிங் போன்ற செயல்பாடுகளுக்கு தகுந்தபடி பேட்டரியை செயல்படவைக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்:

மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்:

ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு12nm FinFET தொழில்நுட்ப வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 சிபயு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் சில சாம்சங் ஸ்மார்ட்போன்களிலும் இதுபோன்ற சிப்செட் வசதிகள் அதிகமாக இடம்பெறுகிறது.

நான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.!நான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி/4ஜிபி ரேம் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, ரேம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மாறுபடுகிறது. மேலும் கேமிங் வசதிக்கு வேண்டி இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதியில் சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு:

13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு:

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ5எஸ் சாதனம் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சமும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ போன்களின் வடிவமைப்பு எப்பொழுதுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒருபடி மேல் தான் இருந்துள்ளது.

உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z.! ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி!உலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z.! ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி!

ஒப்போவின் முந்தய ஸ்மார்ட்போன்களை போல் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனும் முதல் பார்வையிலேயே உங்களின் மனதை கொள்ளைகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதன் முதலில் நானோ பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுதிவுள்ளது ஒப்போ நிறுவனத்தின் தனி சிறப்பு. ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் மெட்டல் கிளாஸ் டிசைன் உடன் கூடிய வளைந்த தோற்றம் உங்கள் கைக்கும் சுகமான அனுபவத்தை தருகின்றது.

ஆண்ட்ராய்டு வி8.1 ஒரியோ இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு வி8.1 ஒரியோ இயங்குதளம்:

ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு வி8.1 ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இதனுடன் கலர் ஒஎஸ் 5.2.1 வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும். ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒப்போ நிறுவனம்இ ஒப்போ பைண்ட் எக்ஸ் மற்றும் ஒப்போ ஏ5எஸ் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களின் மூலம் ஒரு புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஸ்மார்ட்போன் சந்தையில் உருவாக்கியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
xiaomi-redmi-note-7-pro-india-price-specifications-and-features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X