Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. IP65 ரேட்டிங்.. 6000mAh பேட்டரி.. அறிமுகமானது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ, மோட்டோ, சியோமி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி (Oppo A5i Pro 5G) போனை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி அம்சங்கள் (Oppo A5i Pro 5G specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1604 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கலர்ஓஎஸ் 15.0.1 (ColorOS 15.0.1.) சார்ந்த ஆண்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியுடன் ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி வெளிவந்துள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளது.

6000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 194 கிராம் ஆகும். பிரீஸ் ப்ளூ (Breeze Blue), மிட்நைட் பர்பிள் (Midnight Purple) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆனால் ஒப்போ ஏ5ஐ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த புதிய ஒப்போ போனின் விலை MYR 799 (இந்திய மதிப்பில் ரூ.16,600)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A5i Pro 5G with Snapdragon 4 Gen 2 launched: Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X